Read more
price/690.00
கள்வனின் காதலி - கல்கி
Product Description
இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.[1] இது ஒரு சமூக நூலாகும்.
கதைச் சுருக்கம்
சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக ஆனவன் முத்தையன். கார்வார் சங்குப்பிள்ளை என்னும் சுரண்டல் பேர்வழியால் அவன் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு திருடனாகிறான். அவன் தங்கை அபிராமி. அவனுடைய காதலி கல்யாணி. முத்தையன் சிறையிலிருந்து தப்பி ராஜன் வாய்க்கால் பக்கம் காடுகளில் ஒளிந்திருக்கிறான். அவனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி முயல்கிறார். முத்தையன் தன் தோழன் கமலபதி பெண்வேடமிட்டு வந்தபோது அவனுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட கல்யாணி அவனை போலீஸுக்கு காட்டிக்கொடுக்கிறாள். சர்வோத்தம சாஸ்திரி அவனை சுட்டுக்கொல்கிறார். உண்மையை உணர்ந்த கல்யாணி இறைவழிபாட்டில் ஈடுபடுகிறாள். சர்வோத்தம சாஸ்திரியின் மனசாட்சி உறுத்த அவர் வேதாந்த விசாரத்தில் ஈடுபடுகிறார். அபிராமியை சர்வோத்தம சாஸ்திரி அனாதை விடுதியில் சேர்க்கிறார்.
நூலாசிரியர்
கள்வனின் காதலி (1937) கல்கி எழுதிய இரண்டாவது நாவல். கல்கி என்னும் பெயரில் எழுதிய முதல் நாவல். இந்நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
0 Reviews